டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற மர்ம பெண் யார்? திடுக்கிடும் தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற மர்ம பெண் சீனாவை சேர்ந்தவர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டிற்குள் சீனாவைச் சேர்ந்த யூஜிங் ஜங் என்ற பெண் நுழைய முற்பட்டார்.

அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தபோது முதற்கட்ட விசாரணையில் அந்தப்பெண் ஐக்கிய தேசிய சீன அமெரிக்க கூட்டுறவு சங்கத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்துள்ளதாக கூறினார். ஆனால் விசாரித்ததில் அவர் கூறியது பொய் என தெரிய வந்தது. இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply