shadow

டிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்த பெண் மீது நடவடிக்கையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்றை ரகசியமாக பதிவு செய்த அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் அந்த ஆடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஆடியோ அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிபரப்பானது

டிரம்ப் மற்றும் ஒமரோசா பேசிய இந்த உரையாடலில் ஒருசில அரசு முடிவுகள் எடுக்கப்பட்ட தகவல்களும் இருந்ததாம்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘அந்தப் பெண், பணியை இழந்த பின்னர் என்னைத் தாக்கத் தொடங்கி உள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவரை கேட்டு உள்ளேன்” என்று கூறி உள்ளார்.

டிரம்பின் வக்கீல் ரூடி கிலானி கருத்து தெரிவிக்கையில், “வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்ததின் மூலம் அவர் சட்டத்தை மீறி விட்டார்” என கூறி உள்ளார்.

Leave a Reply