shadow

டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்தேனா? துணை முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்

வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் அமமுகவை இணைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் டிடிவி தினகரனுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திக்கு ஓபிஎஸ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல்.

18 எம்.எல்.ஏக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன்.

உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply