shadow

டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் வசதி: அமைச்சர் தங்கமணி

டாஸ்மாக் கடைகளில் விரைவில் ஸ்வைப்பிங் மிஷிங் வசதி கொண்டு வரப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க இருப்பதாக அரசு ஏற்கனவே கூறியுள்ள நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளி விற்பனையை அதிகரிக்க விரைவில் ஸ்வைப்பிங் மிஷின் வசதி கொண்டு வரப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை அதிகரிக்கவும் சில்லறை தட்டுப்பாட்டை தவிர்க்கவும் ஸ்வைப்பிங் மிஷின் வசதி வெகுவிரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதனால் மதுவிற்பனை அதிகரிக்கும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது இன்னொரு கவலையான விஷயம் ஆகும்

ரேஷன் கடை உள்பட இன்னும் பல அரசு நிறுவனங்களில் ஸ்வைப்பிங் மிஷின் வசதி இல்லாத போது டாஸ்மாக்கிற்கு மட்டும் இந்த வசதி கொண்டு வருவது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply