shadow

டார்ஜிலிங் ஸ்ட்ரைக் எதிரொலி: 17 பேர் மட்டும் எழுதிய பொதுத்தேர்வு!

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் தொடரும் முழு அடைப்பு காரணமாக, அரசுப் பணிக்கான பொதுத்தேர்வில் 17 பேர் மட்டுமே பங்குபெற்றுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளை உள்ளடக்கி கூர்காலாந்து என்ற புதிய மாநிலத்தை உருவாகக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர் ஜூன் 12ஆம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில அரசின் ஆடிட்டர் மற்றும் அக்கவுண்டன்ட் பணி இடங்களுக்கான பொதுத்தேர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதற்காக டார்ஜிலிங் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில், 10 அறைகளில் 361 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெறும் 17 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். இதனால், அனைவரும் ஒரே அறையில் அமர வைக்கப்பட்டனர்.

வழக்கமாக, கொல்கத்தா மற்றும் டார்ஜிலிங் ஆகிய இரு இடங்களில் மட்டுமே தேர்வு நடைபெறும். ஆனால், டார்ஜிலிங்கில் தொடரும் முழு அடைப்பு போரட்டத்தைக் கருத்தில் கொண்டு, தேர்வு எழுதுவபர்களின் வசதிக்காக இந்த முறை சிலிகுரியிலும் கூடுதலாக தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இருப்பினும் சிலிகுரியில் தேர்வு மையத்தில் 159 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 176 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருக்கின்றனர். அம்மாநில அரசு நடத்தியுள்ள அலுவலகப் பணிக்கான பொதுத்தேர்வுகளில் மிகவும் முறைவான வருகைப்பதிவுடன் நடந்த தேர்வு இதுவாகும்.

இத்தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்ட்ட தேர்வு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

Leave a Reply