shadow

டபிள்யூடிஓ-வில் வழக்குகளை எதிர்கொள்ள சிறப்பான வழக்கறிஞர் குழுவை உருவாக்க வேண்டும்

reeta_2838213hசர்வதேச வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) வழக்குகளை எதிர்கொள்ள சிறப்பான வழக் கறிஞர் குழுவை உருவாக்க வேண்டியது அவசியம் என்று மத்திய வர்த்தகத்துறைச் செயலர் ரீட்டா தியோஷியா தெரிவித்தார்.

சர்வதேச வர்த்தக அமைப்பின் முன்பாக வரும் வழக்குகளை எதிர்கொள்வது இந்தியா உள்ளிட்ட அனைத்து வளரும் நாடுகளும் கடுமையான பிரச்சினையாக உள்ளது. இதற்கு வலுவான வழக்கறிஞர்கள் குழு இல்லாததே காரணமாகும்.

சர்வதேச வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற அதிலும் வர்த்தக விதிமுறைகளை நன்கு அறிந்த வழக்கறிஞர்கள் குழுவை உருவாக்க வேண் டியது அவசியம்.

இந்தியா மட்டுமின்றி வளரும் நாடுகள் அனைத்துமே இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்ள வெளிநாடு வர்த்தகம் தொடர்பான இந்திய கல்வி மையம் (ஐஐஎப்டி) ஏற்பாடு செய்திருந்த டபிள்யூடிஓ சமரச தீர்வு குறித்த கருத்தரங்கில் பேசிய அவர் மேலும் கூறியது:

தற்போது வெளிநாடுகளில் உள்ள சட்ட நிறுவனங்களோடு இணைந்து இத்தகைய வழக்குகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இந்திய சட்ட நிறுவனங்களும் இணைந்து செயல்படுகிறது.

இருப்பினும் இதுபோன்ற வழக்குகளைக் கையாள்வதற்கு நிபுணத்துவம் தேவைப்படுகிறது. சர்வதேச வர்த்தக விதிமுறைகள் அறிந்த சட்ட நிறுவனங்களுக்கு இத்துறையில் மிக அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

டபிள்யூடிஓ சமரச தீர்ப்பாயத் தில் இந்தியா பங்கெடுத்து தீர்வுகளைக் கண்டு வருகிறது. பிற நாடுகள் மீது 22 வழக்குகளை இந்தியா தொடுத்துள்ளது. 23 வழக்குகளில் தீர்வு எட்டியுள்ளது.

இதுவரையில் 100-க்கும் அதிக மான வழக்குகளை இந்தியா கையாண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சட்டக்கல்வி

சர்வதேச வர்த்தக விதிகளை இந்தியாவில் உள்ள சட்ட கல்வி மையங்கள் மாணவர்களுக்கு பரிச்சயமாக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச வழக்கு களை எதிர்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

டபிள்யூடிஓ அமைப்பில் மிக அதிக எண்ணிக்கையிலான வழக்கு கள் உள்ளன. இதனால் இதில் தீர்வு கிடைப்பதற்கு கால தாமதம் ஆகும் என்று குறிப்பிட்ட அவர். சில வழக்குகள் இந்தியாவுக்குச் சாதகமாகவும், சில பாதகமாகவும் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சமீபத்தில் சூரிய மின்னாற்றல் தொடர்பாக டபிள்யூடிஓ பிறப்பித்த உத்தரவு இந்தியாவுக்கு எதிராக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply