ஜெயலலிதா மரணத்திற்கு காரணமே திமுக தான்: முதல்வர் பழனிசாமி

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சிறையில் அடைப்போம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வரும் நிலையில் ஜெ. மரணத்தைப் பற்றி திமுக விசாரிக்குமாம்; அவரது மரணத்திற்கு காரணமே திமுக தான் என்று அரக்கோணத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரையின்போது கூறினார்.

மேலும் திமுக தேர்தல் அறிக்கை பொய்யானது என நாங்கள் கூறியது உண்மைதான் என்றும் மக்களுக்கு நன்மை செய்யக்கூடியதையே அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கோடநாடு விவகாரத்தில் தன் மீது பழிசுமத்த திட்டம் தீட்டியுள்ளதாகவும், தன் மீது பழிசுமத்த ஹோட்டலில் வைத்து திட்டம் தீட்டியதாக வெளியான வீடியோவை பார்த்ததாகவும் கூறிய முதல்வர் பழனிச்சாமி, சாதிக்பாட்ஷா மரணம், அவரது மனைவி கார் மீதான தாக்குதலை அரசு கூர்ந்து கவனிப்பதாகவும் கூறினார்.

Leave a Reply