shadow

ஜெயலலிதா சிலையை அடுத்து கருணாநிதி சிலை திறக்கும் தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் டிசம்பர் மாதம் 16ம் தேதி திறக்கவிருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறித்துள்ளது.

தற்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை சீரமைக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு சிலைகளையும் அன்றைய தினமே திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply