ஜீனியஸ் நடிகரின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குனர்

ஜீனியஸ் என்ற படத்தில் நடித்த ரோஷன் இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை கார்த்திக் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் சென்னையில் உள்ள ஒரு முக்கிய இடத்தில் இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் வரும் அக்டோபரில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply