shadow

‘ஜீனியஸ்’ திரைவிமர்சனம்

genius  ஐடியில் பணிபுரியும் ரோஷனை அவரது உயரதிகாரி சக்கையாக பிழிந்து வேலை வாங்கியதால் மூளையில் தடுமாற்றம் அடைகிறது. ரோஷனுக்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டுமென்றால் அவரை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் அறிவுரை கூறுகிறார். இதனையடுத்து ரோஷனின் பெற்றோர் ஆடுகளம் நரேன், மற்றும் மீரா கிருஷ்ணன், ரோஷனுக்கு பிடித்தவாறு நடந்து கொள்கின்றனர். இந்த நிலையில் உறவினர் சிங்கம்புலி ரோஷனை ஒரு பலான இடத்திற்கு அழைத்து செல்ல, அங்கு பார்க்கும் பிரியாலாலை ரோஷன் காதலிக்கின்றார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க காதல் கைகூடியதா? ரோஷனுக்கு குணமாகியதா? என்பதுதான் கிளைமாக்ஸ்

ஒரு புதுமுக நடிகர் போன்றே இல்லாமல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ரோஷனுக்கு பாராட்டுக்கள். மேலும் ஐடி ஊழியர், அப்பாவி இளைஞர் என்ற வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ரோஷன். ஒரு அறிமுக நடிகர் இந்த அளவுக்கு ஒரு கனமான வேடத்தை ஏற்று சமாளித்ததற்கே அவரை பாராட்டலாம்

நாயகி பிரியாலாலுக்குக் காட்சிகள் குறைவு என்றாலும் வரும் காட்சிகளில் நிறைவான நடிப்பை தந்துள்ளார். குறிப்பாக ரோஷனின் தந்தை ஆடுகளம் நரேனிடம் அவர் பேசும் காட்சிகள் சூப்பர்

geniusஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் ஜெயபாலன், மற்றும் சிறுவயது ரோஷனாக நடித்த சிறுவர்கள் என அனைவரின் நடிப்பும் கச்சிதம்

இளம் இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றது. ஒளிப்பதிவாளர் குருதேவ், கிராமத்து காட்சிகளை மிக இயல்பாக படமாக்கியுள்ளார்.

இன்றைய அவசர உலகத்தில் ஒரு குழந்தையை படிப்பு படிப்பு என வளர்க்காமல் விளையாட்டு உள்பட பொழுதுபோக்கு விஷயங்களுக்கும் பழக்கப்படுத்த வேண்டும் என்பதை மிக அழகாக இயக்குனர் கூறியுள்ளார். அதே சமயம் அதிக சம்பளம் பெற்று உடல், மனம் இரண்டையும் கெடுத்து கொள்ளும் இன்றைய ஐடி இளைஞர்களுக்கு இந்த படம் ஒரு பாடம். மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம்

ரேட்டிங்: 4/5

Leave a Reply