shadow

ஜியோவுக்கு எதிரான ஏர்டெல்லின் டெக்னாலஜி போர். ரூ.2000க்கு 4ஜி மொபைல்

ரிலையன்ஸ் ஜியோ, பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் 4ஜி மொபைல் போன்களை குறைந்த விலையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனமும் ரூ.2000க்கு 4ஜி மொபைல் வழங்கவுள்ளது.

Volte என்ற புதிய டெக்னாலஜியால் தான் ஜியோ இந்த அளவுக்கு புகழ் பெற முடிந்தது. டவர் மூலம் இல்லாமல் இணையத்தின் வழியே அழைப்புகள் செல்லும் டெக்னாலஜிதான் இது.

தற்போது இதே டெக்னாலஜியை ஏர்டெல் நிறுவனம் பின்பற்றவுள்ளது. மும்பையில் ஏற்கனவே இந்த டெக்னாலஜியை அறிமுகம் செய்துவிட்ட ஏர்டெல், தீபாவளிக்குள் மற்ற பெரிய நகரங்களிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரூ.2000க்கு ஏர்டெல் வழங்கவுள்ள புதிய மொபைல் போனின் விபரங்கள்:

ஆண்டிராய்டு ஓ.எஸ்

-4 இன்ச் திரை

-1600 Mah பேட்டரி

-1 ஜிபி ரேம்

-முன்பக்க மற்றும் பின்பக்க கேமராக்கள்.

ஆண்டிராய்டு ஓ.எஸ் இருப்பதால் அனைத்து ஆண்டிராய்டு ஆப்களையும் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும்.

Leave a Reply