shadow

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் நாட்டில் ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும்!

ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வருவதால், இந்திய அளவில் ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும் என்று, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் ஒற்றை சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்குக் கொண்டுவரும் மத்திய அரசின் முயற்சி இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஜிஎஸ்டி என்ற பெயரில் இந்த வரிவிதிப்பு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த வரிவிதிப்பில், பல்வேறு உற்பத்திப் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் வரி உயர்த்தப்படலாம் என, தொழில் நிறுவனங்கள் கவலை தெரிவிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வரும்பட்சத்தில், நாட்டில் புதியதாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பை சமாளிக்கும் வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நேரடியாக தொழிலாளர்களை வேலைக்கு வைக்காமல், அவுட்சோர்சிங் முறையில் தங்களது பணி ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயற்சிக்கும். இதனால், ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் பல்வேறு துறைகளிலும் ஏற்படும் என்று, அந்த தனியார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply