shadow

ஜான்கென்னடி கொலை குறித்த 2891 கோப்புகளை வெளியிட்டார் டிரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொலை குறித்த 2891 ரகசிய கோப்புகளை அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டார். இன்னும் ஒருசில நாட்களில் மேலும் சில கோப்புகளை வெளியிட உள்ளதாகவும், இருப்பினும் நாட்டின் நலன், பாதுகாப்பு கருதி ஒருசில கோப்புகளை வெளியிட முடியாது என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி ஆஸ்வால்டு என்பவரால் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனாலும் இந்த கொலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளில் எழுந்து வந்தது. ஆனால் அமெரிக்க அரசு இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்காமல் பல கோப்புகளை ரகசியமாக காத்து வந்தது

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற டிரம்ப், இந்த கோப்புகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தார். இதன்படி தற்போது 2891 ரகசியக் கோப்புகளை விடுவிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து அந்த கோப்புகளை தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply