ஜனவரி 10ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை என்ற நிலையில் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெள்ளியன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக ஜனவரி 10ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறையில்லை என்றும் 2ஆவது வெள்ளிக்கிழமையான 10ஆம் தேதிக்கு பதிலாக 16ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே பொங்கல் பரிசு பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் ஜனவரி 10லும் பெற்று கொள்ளலாம்

Leave a Reply