shadow

சைக்கிள் மோதியதால் சேதமான கார்! வைரலாகும் வீடியோ

ஒரு சைக்கிளும் காரும் மோதி விபத்து ஏற்பட்டால் சைக்கிள் சுக்குநூறாகிவிடும் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் சீனாவில் சைக்கிள் மீது கார் மோதியதால் காரின் பம்பர் நெளிந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சீனாவில் உள்ள செஞ்சான் என்ற நகரில் வேகமாக டிராபிக் ரூல்ஸை மதிக்காமல் வந்த சைக்கிள் காரின்மீது படுவேகமாக மோதியது. இந்த விபத்தில் சைக்கிளை ஓட்டி வந்தவருக்கு சிறு காயமே ஏற்பட்ட நிலையில் காரின் பம்பர் நெளிந்தது.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வலம்வந்தபோது பலர் இதனை போட்டோஷாப் என்றே கருதினர். ஆனால் சீன காவல்துறையினர் இந்த விபத்தின் சிசிடிவி காட்சியை வெளியிட்ட பின்னர்தான் பலர் இதனை நம்ப தொடங்கியுள்ளனர்

Leave a Reply