shadow

செயில் நிறுவனத்தில் 226 டிரெய்னி பணி

4இந்தியாவின் முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனமான செயில் (Steel Authority of India Limited) நிறுவனத்தின் மேற்கு வங்க மாநிலம் பர்ன்பூரில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் 226 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்

பணி: Operator-cum-Technician (Trainee) (S-3) -134

பணி: Attendant-cum-Technician (Trainee) (S-1) – 70

பணி: Attendant-cum-Technician Heavy Vehicle Operation-10

பணி: Specialist / Medical Officer/ Dental Surgeon / Principal -School of Nursing / Nursing Superintendent (E-3/E-1) – 12

தகுதி: Operator-cum-Technician (Trainee) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மெட்டலார்ஜி, எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

Attendant-cum-Technician (Trainee) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிட்டர், எலக்ட்ரீசியன் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவமர்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

Attendant-cum-Technician Heay Vehicle Operation பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமமும் ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: Operator-cum-Technician (Trainee) பணிக்கு ரூ.250. Attendant-cum-Technician (Trainee) பணிக்கு ரூ.150. Attendant-cum-Technician Heavy Vehicle Operation பணிக்கு ரூ.150. பிற பணிகளுக்கு ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

‘The Office of DGM (personal CF), SAIL-IISCO Steel Plant, 7 The Ridge, Burnpur 713325, Burdwan District, West Bengal’

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.08.2016

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு //sailcareers.com/pdf/IISCO.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply