shadow

செபி’ நடவடிக்கை: ரூ. 224 கோடி அபராதம் வசூல்

13பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான `செபி’ மேற் கொண்ட நடவடிக்கையின் பல னாக ரூ. 224 கோடி வசூலாகி யுள்ளது. மொத்தம் 614 வழக்கு களில் செலுத்தப்பட்ட அபராதத் தொகை இதுவாகும். 2015-16-ம் நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதுவாகும்.

2014-15-ம் நிதி ஆண்டில் `செபி’ மேற்கொண்ட நடவடிக் கைகளின் எண்ணிக்கை 1,619 ஆகும். வங்கிக் கணக்கு முடக் கம், லாக்கர் மற்றும் பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

சந்தை விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது `செபி’ அப ராதம் விதிக்கிறது. இந்த அபரா தத் தொகையைச் செலுத்தத் தவ றும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து இந்தத் தொகையை வசூலிக்கும் அதிகாரம் செபி-க்கு அளிக்கப் பட்டுள்ளது.

2014-15-ம் நிதி ஆண்டில் இவ்விதம் வசூலான அபராதத் தொகை ரூ. 19.20 கோடியாகும்.

Leave a Reply