shadow

சென்னை திரும்பினார் ஸ்டாலின்: மேகதாது அணை குறித்து விவாதித்ததாக தகவல்

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கவும், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொள்ளவும், சமீபத்தில் டெல்லி சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்

டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மேகதாது அணை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேவகவுடாவுடன் விவாதித்ததாகவும், ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேகதாது அணை விஷயத்தில் கர்நாடக அரசு தீவிரமாக இருக்கும் நிலையில் தேவகவுடாவுடன் ஸ்டாலின் விவாதித்தது எந்த அளவு பயனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

Leave a Reply