சென்னை சென்ட்ரலில் சுரங்க நடைபாதை: இன்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரே மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வந்ததால் அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இருந்து வரும் புறநகர் ரயில் பயணிகளும் பூங்காநகர் மார்க்கத்தில் இருந்து வரும் ரயில் பயணிகளும் சாலையை கடந்தும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட உயர்மட்ட நடைபாதையையும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துடன் பூங்கா ரயில் நிலையம் மற்றும் பூங்கா மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதை இன்று தறக்கப்பட்டுள்ளது.

40 மீட்டர் நீளமுள்ள இந்த சுரங்க நடைபாதையின் அமைப்பு முறை அறிவிப்புகளாக வைக்கப்பட்டுள்ளன. இருபுறமும் வயதானவர்கள் ஊனமுற்றோரும் பயன்படுத்த எஸ்கலேட்டர் வசதி உள்ளது.

பயணிகள் சுரங்க நடைபாதயை பயன்படுத்தியதால் சென்ட்ரல் எதிரே போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. நள்ளிரவு வரை சுரங்கப்பாதையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply