சென்னை அண்ணா சாலையில் முக்கிய போக்குவரத்து மாற்றம்

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது மெட்ரோ பணிகள் முற்றிலும் முடிவடைந்து மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் சேமியர்ஸ் சாலையிலிருந்து நந்தனம் சந்திப்புக்கு வரும் வாகனங்கள் வி.என் ரோடு வழியாக தி.நகர் செல்லும் வகையில் இரு வழி பாதையாக மாற்றப்பட்டது. அதேபோல் செனடாப் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் நேரே வலது பக்கமாக திரும்பி அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி செல்லும் விதமாக சமிபத்தில் சோதனை முன்னோட்டம் நடைபெற்றது.

இந்த வழியை பயன்படுத்திய வாகன ஓட்டிகள் பலரும் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, நேரமும் மிச்சமாவதாக கருத்து தெரிவித்ததை அடுத்து மிண்டும் இதே வழிதடத்தில் சோதனை முன்னோட்டத்தை ஒருசில நாட்கள் நீட்டித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இந்த சாலைகளில் கல்லூரி, பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்,

Leave a Reply