shadow

சென்னையில் ரூ.102ஐ நெருங்கும் பெட்ரோல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.37 என்று விற்பனையாகிறது.

சென்னையில் டீசல் விலை 9 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.15 என்றும் விற்பனையாகிறது.

இதே ரீதியில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.110ம், டீசல் விலை ரூ.100ஐயும் இந்த மாதத்திற்குள் நெருங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது