shadow

சென்னையில் ‘பேட்ட’ , ‘விஸ்வாசம்’ படத்தில் வசூல் என்ன ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும் தல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படமும் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. பேட்ட திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் விஸ்வாசம் படம் அதிகாலை 1 மணிக்கும் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் இரு படங்களின் முதல் நாள் வசூல் வெளியானது. சென்னையில் மட்டும் ‘பேட்ட’ திரைப்படம் முதல் நாளில் ரூ.1.12 கோடியும் ‘விஸ்வாசம்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.88 லட்சமும் வசூல் ஆகி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தமிழக அளவில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் அதிக வசூலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply