சென்னையில் இனி கழிவு நீர், கழிவு நீர் அல்ல: தமிழக அரசு அசத்தல்

சென்னையில் மட்டும் தினமும் சுமார் 500 மில்லியன் லிட்டர் கழிவுநீரை வெளியேறி வரும் நிலையில் இனி இந்த கழிவுநீர் அனைத்தும் கால்வாய்கள் வழியாக வீணாக வெளியேற்றப்படாமல் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் நல்ல தண்ணீராக மாற்றும் மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையம் 348 கோடி மதிப்பில் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டு செயல்பட துவங்கியுள்ளது. எனவே இனி சென்னையில் கழிவு நீர் என்பதே கிடையாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது

பல்வேறு நிலைகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படும் கழிவுநீர் கசடுகள் நீங்குவதற்காக முதல் மூன்று நாட்களுக்கு வெயிலில் குளம்போல் தேக்கிவைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மற்றொரு தொட்டிக்கு மற்றாப்பட்டு குளோரின் கலந்து செரிவூட்டப்படும் . தொடர்ச்சியாக மணல் மற்றும் கூழாங்கற்கள் அடுக்குளால் நிரப்பப்பட்ட தொட்டியில் செலுத்தப்பட்டு இயற்கையாக வடிக்கட்டப்படும் இதன்மூலம் கண்ணுக்குத்தெரியாத கழிவுகள் தொட்டிக்குள்ளேயே தங்கிவிடும்.

இரசாயன நுண்ணிய வடிகட்டி முறையில் மிக நுண் கிருமிகள் நீக்கப்பட்டு அதன்பின் எதிர்மறை சவ்வூடு பரவுதல் முறையில் நுண்ணிய துகள்கள் மற்றும் நுண்ணுயிர்கள் நீக்கப்பட்டு குடிநீருக்கு இணையான தண்ணீராக மாற்றி வெளியேற்றப்படும். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply