சூர்யாவை அடுத்து சிம்புவுடன் ஆர்யா?
நடிகர் ஆர்யா சோலோ ஹீரோவாக நடித்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘காப்பான்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் ஆர்யா தற்போது சிம்பு நடிக்கும் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கன்னட சூப்ப்ர் ஸ்டார் சிவ்ராஜ்குமார் மற்றும் ஸ்ரீமுரளி நடித்த ‘மஃப்டி’ என்ற திரைப்படத்தின் தமிழில் ரீமேக்கில் சிவராஜ்குமார் நடித்த கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீமுரளி  நடித்த கேரக்டரில் ஆர்யாவும் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தை கன்னடத்தில் இயக்கிய நார்தன் தமிழிலும் இயக்கவிருப்பதாகவும் தெரிகிறது

Leave a Reply