shadow

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட படத்தில் தற்போது விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.

ரெய்ன் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம்மேனன், லிங்குசாமி, மிஸ்கின், சசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தொடங்கி உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும், சூர்யா நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’மாஸ்டர்’, ’விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே