சூர்யாவின் ‘என்.ஜி.கே’ பர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே. இந்த திரைப்படம் வரும் மே மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது. இந்த அறிவிப்பால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, என இரண்டு நாயகிகள் நடித்துள்ள இந்த படத்தில் பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Leave a Reply