சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்திய விமானப் படையிடம் இருந்து கிடைக்க வேண்டிய தடையில்லாச் சான்றிதழ் காரணமாக தாமதமானது

இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் அக்டோபர் 26 ஆம் தேதி அதாவது நாளை காலை 10 மணிக்கு சூரரை போற்று டிரைலர் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply