shadow

சூப்பர் ஹீரோ ஆன ஜெய் படத்தின் டைட்டில் அறிவிப்பு

இதுவரை ரொமான்ஸ் படங்களில் மட்டும் நடித்து கொண்டிருந்த நடிகர் ஜெய், தற்போது ஒரு சூப்பர் ஹிரோ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளது

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு விஷால் பீட்டர் இசையமைத்து வருகிறார்.

மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை ஜான் லால் ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் ஜெய் ஏற்கனவே வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’, ‘நீயா 2’, ‘மதுர ராஜா போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply