சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த பட வீடியோ வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் தலைவர் 168’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் டைட்டில் ’அண்ணாத்த’ என்று ஏற்கனவே செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆம் இந்த படத்தின் டைட்டில் ’அண்ணாத்த’ என்பதுதான். டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த போஸ்டரும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply