சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி பெற்ற இந்தியா: தொடரை வென்றது

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இன்றைய போட்டி சூப்பர் ஓவரில் முடிந்தது என்பதும் சூப்பர் ஓவரில் இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 65 ரன்களும், விராட் கோலி 38 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 180 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி ‘டை’யானது. கேப்டன் வில்லியம்சன் 95 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது 17 ரன்கள் எடுத்தது. இதனால் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஏற்பட்டது ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்சர்கள் அடித்த ரோகித் சர்மா இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply