சுஜித் மரணத்தில் சந்தேகம்: வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு!

நடுக்காட்டுப்பட்டி சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்ததை அடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து உபயோகத்தில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்ற விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சுஜித்தை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில மீட்பு படையினர் 86 மணிநேரம் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் சுஜித்தின் மரணத்தில் சில சந்தேகங்களையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் உயிரிழந்தது குறித்து வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரையடுத்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யவுள்ளனர். இந்த விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சுஜித்தின் ஒரு பகுதி உடல் மட்டுமே கிடைத்ததாகவும், சுஜித்தின் முகத்தை அவரது பெற்றோர்களுக்கு கூட காட்டவில்லை என்றும் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்தது மட்டுமன்றி சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறை காங்கிரட் போட்டு மூடி விட்டதாகவும் பல சந்தேகங்கள் நெட்டிசன்களால் எழுப்பப்பட்டு நிலையில் இந்த சந்தேகங்களுக்கு இந்த வழக்கின் விசாரணையில் விடை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply