shadow

சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 63 வயது புத்தபிட்சு தீக்குளித்து தற்கொலை

சீனாவின் கீழ் கடந்த பல வருடமாக இருந்து வரும் திபெத்தில் கான்ஷி தன்னாட்சி மாகாணத்தை சேர்ந்தவர் தெங்கா (63). புத்த பிட்சுவான இவர் கிராம குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் ஆசிரியராக இருந்தார்.

இந்த நிலையில் அவர் நடுரோட்டில் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் தெருவில் நின்றபடி, ‘திபெத்துக்கு சுதந்திரம் வேண்டும்’ என கூச்சலிட்டார்.

உடனே ஏராளமானோர் கூடிஅவரது உடலில் எரிந்த தீயை அணைத்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

திபெத் விடுதலைகோரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் அங்கு பலர் தீக்குளித்து உயிர் துறந்துள்ளனர். தற்போது 151-வது நபராக புத்த பிட்சு தெங்கா தற்கொலை செய்துள்ளார்.

இந்த ஆண்டு தீக்குளித்து மரணம் அடைந்தவர்களில் இவர் 5-வது நபர் ஆவார்.

Leave a Reply