‘சீதக்காதி’ சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய்சேதுபதி நடித்த ‘செக்க சிவந்த வானம்’ மற்றும் ’96’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘சீதக்காதி’ திரைப்படம் வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிடவுள்ளார். இந்த படத்திற்கு ’96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘பாஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.