சீட் கிடைக்கவில்லை என்றாலும் கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ், இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சீட் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

இந்த நிலையில் ‘காங்கிரஸ் மேலிடம் ஒதுக்கும் தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் ஒருவேளை சீட் கிடைக்காவிட்டாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனுக்கு சீட் உறுதி என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

 

Leave a Reply