shadow

சிவராத்திரியின்போது நடக்கும் நான்கு கால பூஜை

சிவாலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜைகளையும் தரிசித்து, விடிய விடிய விழித்திருந்து, விடிந்ததும் நீராடி, எவருக்கேனும் அன்னதானம் செய்து, சிவனாரை வழிபட்டால்… முக்தி நிலையை அடையலாம்.

பால பருவம், இளம் பருவம், மத்திம பருவம் மற்றும் முதுமை என நான்கு காலங்களிலும் மனிதர்கள், சிறப்பாக வாழவேண்டும், அல்லவா! அதற்காகத்தான், சிவபெருமானுக்கு சிவராத்திரியின்போது நான்கு கால பூஜை விமரிசையாக நடைபெறுகிறது.

மகா சிவராத்திரி நாளில், மாலை 6 மணி முதல் 9 மணி வரை, முதல் ஜாம பூஜை. லிங்கத் திருமேனியை, பஞ்ச கவ்யத்தால் அபிஷேகித்து, வில்வம் மற்றும் தாமரையால் அர்ச்சித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.

இரவு 9 மணி முதல் 12 மணி வரை 2-ஆம் ஜாமம். தேன், சர்க்கரை, பால், நெய் மற்றும் வாழைப்பழம் சேர்ந்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, செண்பகம் மற்றும் துளசியால் அர்ச்சித்து வழிபடலாம்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 3-ஆம் ஜாமம். தேனபிஷேகம் செய்து, அருகால் அர்ச்சிக்க வேண்டும்.

அடுத்து, அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை 4-ஆம் ஜாமம், கருப்பஞ்சாறு கொண்டு (அதாவது, கரும்புச் சாறு) அபிஷேகம் செய்து, நீலோத்பலம் மற்றும் விளா இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

இப்படி முறைப்படி சிவாலயத்தில் நடைபெறும் நான்கு கால பூஜைகளையும் தரிசித்து, விடிய விடிய விழித்திருந்து, விடிந்ததும் நீராடி, எவருக்கேனும் அன்னதானம் செய்து, சிவனாரை வழிபட்டால்… முக்தி நிலையை அடையலாம்.

Leave a Reply