சிவசேனா என்ன அதிமுகவா? அமித்ஷா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் உத்தவ் தாக்கரே!

பாஜகவின் அமித்ஷா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் அதிமுகபோல் அல்ல சிவசேனா என்றும், அமித்ஷாவின் கண்ணில் விரலைவிட்டு சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே என்றும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பாஜக சொல்வதையெல்லாம் அதிமுக அரசு தலையாட்டி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அமித்ஷாவின் அரட்டல் மிரட்டல் எல்லாம் சிவசேனாவிடம் எடுபடாது என்றும், அமித்ஷாவை விட பல மடங்கு அதிரடியானவர் உத்தவ் தாக்கரே என்றும், எனவே அமித்ஷாவின் பார்முலா சிவசேனாவிடம் பலிக்காது என்றும் சிவசேனா ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவசேனாவின் ஒரு எம்.எல்.ஏவை கூட அமித்ஷாவால் தொட முடியாது என்றும், சிவசேனா தலைமையில்தான் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையும் என்றும் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply