சிவகங்கையில் ராகுல்காந்தி போட்டியா? காங்கிரஸின் சஸ்பென்ஸ் வேட்பாளர் பட்டியல்

திமுக கூட்டணியில் பத்து தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி நேற்று நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலையே அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் புதுச்சேரி உள்பட 9 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அமேதி தொகுதியில் போட்டியிட்டாலும், தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் சிவகங்கை தொகுதி வேட்பாளர் சஸ்பென்ஸில் வைக்கப்பட்டுள்ளது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் 9 தொகுதிகள் வேட்பாளர் பட்டியல் விபரம்:

1. திருவள்ளுர் – திரு கே. ஜெயக்குமார்

2. கிருஷ்ணகிரி – டாக்டர் ஏ. செல்லக்குமார்

3. ஆரணி – டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்

4. கரூர் – செல்வி எஸ். ஜோதிமணி

5. திருச்சிராப்பள்ளி – திரு சு. திருநாவுக்கரசர்

6. தேனி – திரு. ஈ.வி.கே.ஸ் இளங்கோவன்

7. விருதுநகர் – திரு மாணிக்கம் தாகூர்

8. கன்னியாகுமரி – திரு வசந்தகுமார்

9. புதுச்சேரி -திரு. வைத்தியலிங்கம்

Leave a Reply