சிலிண்டர் விலை ஏற்றம் மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை: பெட்ரோலிய அமைச்சகம் தகவல்

சமீபத்தில் சிலிண்டர் விலை மிக அதிகமாக உயர்த்தப்பட்டது என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிலிண்டர் விலை ஏற்றத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் அரசுக்குத்தான் கூடுதல் செலவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

சிலிண்டர் சிலிண்டர் கேஸ் விலை 147 உயர்த்தப்பட்டு இருந்தாலும் 138 ரூபாய் மானிய தொகையை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே விலையேற்றம் பொதுமக்கள் தலையில் விழாது என்றும் அது மானியமாக அவர்களுடைய வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் சிலிண்டர் விலை 147 ஏறினாலும் 138 ரூபாய் அதிகமாக மானியம் வருவதால் பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை என்பது உறுதியாகிறது

Leave a Reply