shadow

சிம்பு மீது பாலியல் குற்றச்சாட்டா? லேகா டுவீட்டால் பரபரப்பு

மீடூ ஹேஷ்டேக் மூலம் நடிகைகள் உள்பட திரை நட்சத்திரங்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது சிம்பு மீது நடிகை லேகா வாஷிங்டன் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

லேகா வாஷிங்டன் தனது டுவிட்டரில் ‘ஒரு வார்த்தை’ ‘கெட்டவன்’ என்று மர்மமான டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். சிம்பு நடித்த கெட்டவன்’ என்ற திரைப்படத்தில் லேகா வாஷிங்டன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் டிராப் ஆகிவிட்டாலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது லேகாவுக்கு சிம்பு பாலியல் தொல்லை கொடுத்ததாகவே இந்த டுவீட்டை பலர் புரிந்து கொள்கின்றனர்.

லேகாவின் இந்த டுவிட்டால் சிம்பு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்திருந்தாலும் சிம்பு இதை செய்திருப்பார் என்ற ரீதியிலும் பலர் டுவீட் செய்து வருகின்றனர். லேகா தனது குற்றச்சாட்டை சின்மயி போன்றவர்கள் போல தெளிவாக கூறினால் இந்த குழப்பம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை

 

Leave a Reply