சிம்புவின் பிளாப் படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா!

சிம்பு நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது தெரிந்ததே. சிம்பு நடித்த படங்களிலேயே மிக மோசமான படம் என்று விமர்சனம் செய்யப்பட்ட இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அடுத்ததாக பிரபுதேவா நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பரதன் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14ம் தேதி வெளியாக இருப்பதாக பிரபுதேவா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply