சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்கள்

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சிம்பு நடிப்பில் மக்வென் என்பவர் இயக்கத்தில் பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் போட்டியாளரான மகத் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் மனோபாலா, மாகாப உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் மற்ற அறிவிப்புகள் நாளை வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பரதன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நாளை என்னென்ன செய்திகள் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply