shadow

சின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்? சீமான் கேள்வி

வைரமுத்து-சின்மயி விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழ்த்திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பல திரை உலகினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சின்மயி ஆதாரம் இல்லாமல் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் திரையுலகம், ஸ்ரீ ரெட்டி ஆதாரத்துடன் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டிய போது ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘ “கடவுளாக வணங்கக் கூடிய பெண்களைப் போற்ற வேண்டிய சமூகத்தில், அவர்களைப் பாதுகாக்க தனிக்குழு அமைக்க வேண்டிய அவலத்திற்கு வந்து விட்டது.

தற்போது பிரபலமடைந்துள்ள மீ டு மூலம் பாடகி சின்மயி, வைரமுத்து மீது முன் வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பல திரைஉலக பிரபலங்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

ஆனால் இதே போன்ற குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன், அதுவும் பெயரைக் குறிப்பிட்டு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முன் வைத்த போது யாருமே அது குறித்து வாய் திறக்கவில்லையே என்று கூறியுள்ளார்.

அதேபோல் சின்மயியை பின்புறம் இருந்து யாரோ இயக்குவதாக கூறும் சீமான், ஸ்ரீரெட்டிக்கு பின்புறம் யார் இருந்தார் என்ற கேள்வியை ஏன் கேட்கவில்லை? என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

Leave a Reply