‘சிந்துபாத்’ படத்தின் சிங்கிள் வீடியோ பாடல் ரிலீஸ்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சிந்துபாத்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்த படத்தின் சிங்கிள் பாடலான ‘ராக்ஸ்டார் ராபர்’ என்ற வீடியோ பாடல் வரும் 29ஆம் தேதி புதன்கிழமை வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த பாடலை இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்துள்ளார்.

விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர்.

விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply