shadow

tennisசிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது.

இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா), மார்ட்டினா ஹிங்சிங் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்த ஜோடி 1–6, 7–5, 10–5 என்ற செட் கணக்கில் கரோலின் கார்சியா – கிறிஸ்டினா மிலாடனோவிக் (பிரான்ஸ்) ஜோடியை வீழ்த்தியது. ஒரு கட்டத்தில் நம்பர் ஒன்னான சானியா ஜோடி தோல்வியின் விளிம்பில் இருந்தது.

முதல் செட்டை இழந்த இந்த ஜோடி 2–வது செட்டில் 2–5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது. அதில் இருந்து மீண்டும் சிறப்பாக விளையாடி வெற்றியை ருசித்தது.

சாம்பியன் பட்டம் பெற இந்த ஜோடிக்கு 1 மணி 14 நிமிட நேரம் தேவைப்பட்டது. சானியா ஜோடி தொடர்ச்சியாக 30–வது வெற்றியை பெற்று முத்திரை பதித்தது.

சானியா – ஹிங்சிஸ் ஜோடி இணைந்து பெற்ற 11–வது இரட்டையர் பட்டம் இதுவாகும். இந்த ஆண்டில் பெற்ற 2–வது பட்டமாகும். கடந்த வாரம் பிரிஸ்பேன் போட்டியில் வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டில் 2 கிராண்ட் சிலாம் உள்பட 9 பட்டம் பெற்று இருந்தது. திங்கட்கிழமை தொடங்க இருக்கும் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் சானியா ஜோடி இருக்கிறது.

Leave a Reply