shadow

சிகரெட் பிடிப்பவர்களை கண்டுபிடிக்க புதிய தெர்மல் கேமிரா: சிங்கப்பூர் அரசின் புதிய முயற்சி

சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ள நிலையில் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதை கண்காணிக்கவும், இ.சிகரெட் பிடிப்பதை தடுத்து நிறுத்தவும் புதிய டெக்னாலஜியை பயன்படுத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

அதை தடுக்க தடை செய்யப்பட்ட இடங்களில் தெர்மல் கேமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது. அதி தொழில் நுட்பம் வாய்ந்த 300 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் ரோட்டில் எச்சில் துப்புதல், குப்பை கூளங்களை வீசுதல் போன்றவற்றையும் தடுக்க முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.

உலகில் முதன் முறையாக கடந்த 1970-ம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் தான் புகையிலைக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் மூலம் அங்கு புகை பிடிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்தது.

Leave a Reply