சிஏஏ குறித்து ரஜினியின் முதல் கருத்து: பொங்கியெழ தயாராகும் அரசியல்வாதிகள்

இந்தியாவில் சிஐஏ சட்டம் அமல்படுத்தி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை இது குறித்து வாய் திறக்காத ரஜினிகாந்த் முதல்முறையாக இந்த சட்டத்தை ஆதரித்து இன்று பேட்டி அளித்துள்ளார். இதனை அடுத்து அவரது கருத்துக்கு எதிராக பொங்கி எழ தமிழக அரசியல்வாதிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் என்ன சொன்னாலும் அதற்கு எதிராக கருத்துக்களை கூறி அவரை விமர்சனம் செய்து வரும் அரசியல்வாதிகள் சிஐஏ குறித்து இன்னும் ரஜினி எதுவும் பேசவில்லை என விமர்சனம் செய்தார்கள்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ’சிஏஏ சட்டம் அவசியமானது என்றும் இந்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் ஒருவேளை அப்படி பாதிப்பு ஏற்பட்டால் முதல் நாளாக குரல் கொடுப்பேன் என்று கூறினார்
அதேபோல் என்.ஆர்.சி சட்டத்தையும் ஆதரித்துப் பேசிய ரஜினிகாந்த் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். வருமானவரி விஷயத்தில்தான் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்றும் சட்டப்படியே வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் மாணவர்கள் ஒரு விஷயத்திற்கு போராடும் என்று தீவிரமாக யோசித்து போராட வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்களுடைய வாழ்க்கை திசை மாறி விடும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ரஜினிகாந்தின் இந்த கருத்துக்களை வழக்கம்போல் விமர்சனம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர்

Leave a Reply