shadow

சாம்பியன் பர்ஸ்ட் லுக்கை வெளியிடும் பிரபல நடிகர் !

வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது
‘ சாம்பியன் ‘ என்னும் படத்தை இயக்கி வருகிறார். கால்பந்து போட்டிகளை மையமாக கொண்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல நடிகரும் தயாரிப்பு சங்கத்தின் தலைவருமான விஷால் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ரோஷன் என்ற புதுமுகம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் மற்றும் மிர்ணாளினி என்ற புதுமுகம் இந்த படத்தின் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கி வரும் இந்த படத்தில் ‘அஞ்சாதே’ புகழ் நரேன், ஜிகே ரெட்டி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சுசீந்திரன் இயக்கியுள்ள மற்ற படங்களான கென்னடி கிளப் , அஞ்சலீனா போன்ற படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply