shadow

screemதற்போது டேப்லெட் எனப்படும் சிறிய வகை கணினி, செல்லிடப்பேசிகளில் மட்டுமே தொடுதிரை வசதி உள்ளது. பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கப்படும் மடிக் கணினிகளில் இந்த தொடுதிரை வசதி இல்லாத நிலை உள்ளது.

இந்தக் குறைபாட்டை நீக்கும் வகையில் வந்துள்ளதுதான் ஏர்பார் எனும் கருவி. சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு நிறுவனம் தயாரித்துள்ள இந்த கருவி 15.6 அங்குலம் நீளமுள்ள சிறு குச்சி வடிவிலானது.

இக்கருவியை அதே அளவுள்ள மடிக் கணினியின் திரையின் கீழ்ப் பகுதியில் பொருத்தி யுஎஸ்பி மூலம் கணினியில் இணைத்தால் மடிக்கணினியில் தொடுதிரை வசதி தயார். இதற்கென தனியாக மென் பொருள் எதுவும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை. விண்டோஸ் 7, 8, 10 இயங்கு தள மடிக் கணினிகளில் மட்டுமே இக்கருவி இயங்கும்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் 2016 ஜனவரி 6 அன்று நடைபெறும் செயல்விளக்க நிகழ்ச்சியில் இக்கருவி வெளியிடப்படுகிறது. ட்ற்ற்ல்:ஜ்ஜ்ஜ்.ஹண்ழ்.க்ஷஹழ் இணையதளத்தில் முன்பதிவு செய்து கருவியைப் பெறலாம்.

Leave a Reply