shadow

சர்ச்சைக்குரிய ரஃபேல் செய்த சாகசம்

கடந்த சில மாதங்களாகவே ரஃபேல் ஊழல் குறித்து செய்தி வெளியிடாத ஊடகங்களே இருக்காது என்ற அளவில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ராகுல்காந்தி இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் ரஃபேல் போர் விமானம் சாகசம் செய்து அனைவரையும் அசத்தியுள்ளது. பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ரஃபேல் விமானம் பெங்களூரு கண்காட்சியில் சாகசம் நிகழ்த்திய காட்சியை பொதுமக்கள் பலர் ரசித்து பார்த்தனர்.

நேற்று இந்த கண்காட்சிக்காக சாகச பயிற்சி செய்தபோது இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply