சர்க்கரை நோயாளிகள் சிகப்பு கொய்யாப்பழங்களை சாப்பிடலாமா?

பழ வகைகளில் ஒவ்வொரு பழத்தின் நிறத்திற்கு ஏற்ப அவற்றின் குணநலன்கள் மாறுபடும். ஏனெனில் பழத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், சத்துக்கள், ஃபைட்டோ கெமிக்கல்கள் ஆகியவற்றினால் பழங்களின் நிறம் வேறுபடுகிறது.

அதுவும் கொய்யா பழங்களில் சிகப்பு கொய்யா மிகவும் சுவையானது. குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து கொண்டது. இதில் கரோடினாய்டு, விட்டமின் A, C, B3, B6, B9 ,ஃபைபர், பொட்டசியம், ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

சிவப்பு கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள் நம்முடைய செல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி, மார்பக புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

நம் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினை நீக்கி, இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. கர்ப்பிணிகளுக்கு தேவையான விட்டமின் B9 சிவப்பு கொய்யாவில் உள்ளது. எனவே கர்ப்பிணிகள் சாப்பிட்டால் குழந்தை கருவில் உருவாகும் போது ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்கலாம்.

சிவப்பு கொய்யாவில் விட்டமின் B3 மற்றும் விட்டமின் B6 மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைவலி, மன அழுத்தம் போன்றாவை வராமல் தடுக்கிறது. இரும்புச் சத்து அதிகம் கொண்ட சிவப்புக் கொய்யாவை சாப்பிடுவதால், நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் தொற்றுகளினால் ஏற்படக்கூடிய காய்ச்சல், இருமல், சளி ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

சிவப்பு கொய்யாவில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த க்ளைசமிக் இண்டெக்ஸ் ஆகியவை இருக்கிறது. எனவே இந்த சிவப்பு கொய்யாவை சாப்பிடுவதால் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தவிர்க்கலாம். அதனால் சர்க்கரை நோயாளிகள் தயங்காமல் சிவப்பு கொய்யாவை சாப்பிடலாம்.

Leave a Reply